உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக காவலாளி வாய்க்காலில் தவறி விழுந்து பலி

Published On 2022-11-17 06:58 GMT   |   Update On 2022-11-17 06:58 GMT
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக காவலாளி வாய்க்காலில் தவறி விழுந்து பலியானார்.
  • இதுபற்றி அவர்கள் தீவிரமாக துப்புதுலக்கினர்.

சிதம்பரம், நவ.17-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமாரமங்கலம் ராதாநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இந்த ஆடுகள் காணாமல்போனது. எனவே ராமசாமி ஆடுகளை தேடி இரவு நேரத்தில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமியின் மகன் கார்த்திகேயன் தனது தந்தையை தேடினார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மருநாள் குமாரபுரம்-நடராஜபுரம் வடிகால் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது பற்றி அவர்கள் தீவிர மாக துப்புதுலக்கினர். இந்த தகவல் கார்த்திகேயனுக்கு எட்டியது. அவர் உடனடியாக வடிகால் வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அப்போது தனது தந்தையின் உடலை போலீசாருக்கு அடை யாளம் காட்டினார். அண்ணாமலை பல்க லைக்கழக காவலாளியான ராமசாமி வடிகால் வாய்க்காலில் தவறிவி ழுந்தபோது தலையில் அடிபட்டுள்ளது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News