உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதல்-அமைச்சர் இன்று திருவாரூர் வருகை

Published On 2023-08-26 09:58 GMT   |   Update On 2023-08-26 09:58 GMT
  • கார் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
  • முதல்-அமைச்சரின் 4 நாள் பயணம் நாளையுடன் நிறைவடைகிறது.

திருவாரூர்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ளார்.

நேற்று திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், நேற்று மாலை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்தார்.

இன்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார்.

மாலையில் சிறிது ஓய்வெடுக்கும் முதலமைச்சர் நாளை (27.8.23) திருவாரூர் அருகில் உள்ள பவத்தரமா ணிக்கத்தில் நடைபெறும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

அதனைத் தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற நான்கு நாள் பயணம் நாளையுடன் நிறை வடைகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை ஒட்டி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது. மேலும் நாளை மாலை வரை திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க கூடாது என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News