உள்ளூர் செய்திகள்

ஊட்டி நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிச்சிங் நிகழ்ச்சி

Published On 2022-11-12 09:02 GMT   |   Update On 2022-11-12 09:02 GMT
  • முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
  • 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஊடுருவி விட்டது.

ஊட்டி,

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிடும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது. நீலகிரியில் கேக் மிக்ஸிங் செரிமனி என்பது வீடுகளில் சிறிய அளிவில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த கொண்டாட்டம் 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஊடுருவி விட்டது. அனைத்து ஓட்டல்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று கேக் தயாரிப்புக்காக உலர் பழங்களான பேரீச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, பாதாம், பிஸ்தா, அரைக்கப்பட்ட வாசனை திரவியங்கள் ஆகியவை கொண்டு கலவை தயாரிக்கின்றனர். இந்த கலவை பதப்படுத்த மர பீப்பாயில் ஒரு மாத காலம் வைக்கப்படும். பின்னர், மைதா மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விழா ஊட்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊட்டி நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செப் ஆந்தோ னி,வெங்கட்ராவ்,செல்வம் ஓட்டல் மேலாளர் முரளிகுமார் உள்ளிட்ட ஓட்டல் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Tags:    

Similar News