உள்ளூர் செய்திகள் (District)

பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

கோவில் திருவிழாவில் தகராறு - 3 பேர் படுகாயம்

Published On 2022-07-04 08:13 GMT   |   Update On 2022-07-04 08:13 GMT
  • தேர் திருவிழாவின் போது சிலர் மது அருந்தி விட்டு தகராறு செய்தனர்.
  • அவர்களை ஊருக்கு உள்ளே விடாமல் அடித்து விரட்டியதால் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் ஊராட்சி பொன்னுகுடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மாதவன் மனைவி பரிமளா. 2 நாட்களுக்கு முன்பு நடந்த மாதாகோவில் திருவிழாவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.தேர் திருவிழாவின் போது சிலர் மது அருந்தி விட்டு தகராறு செய்தனர். இது ஆன்மீக நிகழ்ச்சி, ஜெபத்துடன் இருக்குமாறு பரிமளா மகன் கேட்டுள்ளார். நீ என்ன கேட்பது என கூறி கோயில்பிள்ளை மகன் சக்கிரியாஸ் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த கட்டையால் தாக்கியுள்ளார்.

ராஜீ, மோகன், சத்யராஜ், தர்மராஜ், நெப்போலியன் சின்னதுரை இவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற பரிமளாவையும் தாக்கி மானப்பங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் பரிமளா மற்றும் மகன், உள்ளிட்டவர்கள் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் அவர்களை ஊருக்கு உள்ளே விடாமல் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செம்பனார்கோவில் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். நடவடிக்கை எடுத்தால் தான் நாங்கள் ஊருக்கு போக முடியும் என்ற அச்சத்தில் மயிலாடுதுறையிலேயே தங்கியுள்ளனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News