புவனகிரி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்: 8 பேர் மீது போலீசார் வழக்கு
- 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
- 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
கடலூர்:
ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் வழிபாடு, விஷேச பூஜைகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வடக்குதிட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத வழிபாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு வடக்குதிட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் தரப்பை சேர்ந்தவர்களும் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் தரப்பை சேர்ந்தவர்களும் கோவிலுக்கு வந்தனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதை பார்த்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த மோதல் குறித்து சந்தோஷ் புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சரண்ராஜ், பழனிவேல், காளிதாஸ், செந்தமிழ் செல்வன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர் சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ், சக்திவேல், ஆகாஷ், சுபாஷ் ஆகியோர் மீதும் மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.