உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்று திருவிழாவையொட்டி கோஷ்டி மோதல்.

Published On 2023-01-21 08:14 GMT   |   Update On 2023-01-21 08:14 GMT
  • தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
  • வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,


விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர்  திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்

.  திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்  இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News