உள்ளூர் செய்திகள்
உடுமலையில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை நகராட்சி தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் "என் குப்பை என் பொறுப்பு" சார்பில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தல் நிகழ்ச்சியானது பொது சுகாதாரப்பிரிவு-II ஐஸ்வர்யா நகர்(ஆர் சி லே அவுட்) பகுதியில் நகராட்சி ஆணையாளர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளர் ராஜமோகன் , பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.