தூத்துக்குடியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்ட பணி
- தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பஜாரில் இருந்து பல்க் பஜார் வரை தூய்மை பணி நடைபெற்றது.
- சாலைகள், பஸ் நிறுத்தம், வீதிகளில் கிடந்த குப்பைகளை பா.ஜ.க.வினர் சுத்தம் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாநகர தெற்கு மண்டலம் சார்பாக முத்தையாபுரத்தில் பிரதமர் மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பஜாரில் இருந்து பல்க் பஜார் வரை தூய்மை பணி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் சின்னத்தங்கம், வர்த்தக பிரிவு தலைவர் பரமசிவம், மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து முத்தையாபுரம் சாலைகள், பஸ் நிறுத்தம், வீதிகளில் கிடந்த குப்பைகளை பா.ஜ.க.வினர் சுத்தம் செய்தனர். கோவில் உட்பட வழிபாட்டுத் தலங்களில் உள்ள குப்பைகளையும் அகற்றப்பட்டு அவை மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், மண்டல் பொருளாளர் பாலகுமார், மகளிர் அணி மண்டல் தலைவி செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி துணைது தலைவர் சிலம்பொழி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், பிரபாகர், முகேஷ், புவனேஸ்வரன், பொய்சொல்லான், முருகேசன், எம்.சி. சேகர், செண்பகராஜ், வெள்ளபாண்டி, பாண்டியன், சவுந்தர்ராஜன், சுந்தர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.