உள்ளூர் செய்திகள்

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள்.

துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் 'வாபஸ்'

Published On 2023-07-01 09:35 GMT   |   Update On 2023-07-01 09:35 GMT
  • பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏட்டப்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்தது.
  • கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன்.

பட்டுக்கோட்டை:

பல்வேறு கோரிக்கை களை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை திடீரென போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தின் போதுஒப்பந்த பணியாளர்களாக தங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தங்களின் சம்பளத்தை உயர்த்தி, பிரதி மாதம் மூன்றாம் தேதிக்குள்ளாக சம்பளம் வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களை நிரந்தர ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே போனது.

இந்நிலையில் நேற்று புதிதாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கும ரன் போராட்டம் நடத்துபவர்க ளிடம் இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் தூய்மை பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் அரசின் கொள்கை முடிவையும், தமிழக முதல்வர் எடுக்கும் முடிவையும் தவிர்த்து பட்டுக்கோட்டை நகராட்சி மூலமாக நிறைவேற்ற அதிகாரம் உள்ள கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றி தருவதாகவும், நான் பட்டுக்கோட்டையில் இன்று தான் பணியில் சேர்ந்து உள்ளேன், எனக்கு குறைந்த கால அவகாசம் கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Tags:    

Similar News