உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் மீன் விற்பனை கூட பகுதியை நகரமன்ற தலைவர் புகழேந்தி பார்வையிட்டார்.

மீன் விற்பனை கூடத்தில் தூய்மை பணி

Published On 2022-06-30 07:07 GMT   |   Update On 2022-06-30 07:07 GMT
  • பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், காந்தி பூங்கா, கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெறுகிறது.
  • தூய்மை பணியாளர்கள் சென்று அந்த இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24 வார்டுகளிலும், தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், கடற்கரை பூங்கா, காந்தி பூங்கா கோவில் மற்றும் தோப்புத்துறை பள்ளிவாசல் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூய்மை பணி நடைபெறுகிறது.

இதன்படி நீண்ட நாட்களாக மீன் விற்பனை நிலையத்தில் புல், மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் நகர மன்ற தலைவர் புகழேந்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

உடன் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், துணை தலைவர் மங்களநாயகி ,வார்டு உறுப்பினர் மயில்வாகனம்மற்றும் தூய்மை பணியாளர்கள் 30 பேருடன் நகரமன்ற தலைவர் புகழேந்தி நேரில் சென்று இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி சுமார் ஒருடன் குப்பைகள் அகற்றபட்டது.பின்பு அப்பகுதிக்கு பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

Tags:    

Similar News