உள்ளூர் செய்திகள்

கடற்கரையில் ஆணையர் ஹேமலதா தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி

Published On 2022-09-18 09:48 GMT   |   Update On 2022-09-18 09:48 GMT
  • 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
  • குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து சென்றனர்.

வேதாரண்யம்:

உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் நகராட்சி சார்பில் வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு சசிகுமார், அரசு கல்லூரி நாட்டு நல திட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் குப்பையில்லா நகரத்தை உருவாக்குவோம் என நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்பு, மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர், கடலோர காவல்படைபோலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.

சேகரிக்கப்பட்ட குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் வேதாரண்யம் கடற்கரை மிக தூய்மையாக காட்சியளித்தது.

நகராட்சி நிர்வாகம் கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதால் மாணவர்கள் குறைந்த அளவே மண்ணில் புதைந்து கிடந்த குப்பைகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது. கடற்கரையை மிக தூய்மையாக வைத்திருந்த வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதாவை பள்ளி மாணவ- மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News