உள்ளூர் செய்திகள்

மாணவர்கள். தூய்மைப்படுத்தும் பணி செய்த போது எடுத்த படம்.

காவிரி நதிக்கரையில் தூய்மைப்பணி செய்த மோகனூர் அரசு பள்ளி என்.சி.சி. மாணவர்கள்

Published On 2022-09-18 08:38 GMT   |   Update On 2022-09-18 08:38 GMT
  • தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர்.
  • மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பரமத்திவேலூர்:

15 பட்டாலியன் என்.சி.சி கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப் ஆணைப்படியும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல் படியும், மோகனூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை–யில் மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர். தூய்மைப்பணியின் போது பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், நீரில் தேங்கியிருந்த ஆடைகள் போன்றவற்றை அகற்றி மோகனூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சங்கர் செய்திருந்தார்.

Tags:    

Similar News