வேதாரண்யம் அரியாண்டிகுளத்தில் தூய்மை பணி
- குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
- குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 108 குளம் மற்றும்ஏரி, உள்ளது. இதில் நகரின் மைய பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் தெருவில் அக்னி தீர்த்தம் எனப்படும் அரியாண்டி குளம் உள்ளது. இந்த குளம் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. தற்போது பலராலும் ஆக்கிரமிப்பு செய்யபட்டு குளத்தின் பரப்பளவு குறைந்தது.
குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் எதிரொலியாக கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கணக்கில் உள்ளப்படி 18-க்கும் மேற்பட்ட குளங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புதாரர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு குளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் அரியாண்டி குளத்தை நகராட்சி தலைவா் புகழேந்தி, துணைத் தலைவர் மங்களநாயகி, ஆணையர் ஹேமலதா, பொறியாளார் முகமது இப்ராஹீம், வார்டு கவுன்சிலர் திருக்குமரன் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் உள்ள செடி, கொடிகள் , ஆகாயத் தாமரையும் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தொடர்ந்து அந்த குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.