பாலகொலா ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் தூய்மைப்பணிகள்
- நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகளின் திட்டஇயக்குனர் உமாமகேஷ்வரி துவக்கிவைத்து துப்புரவு பணிகளை செய்தார்
- ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பாலகொலா ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் 100 சதவிகித தூய்மைப்பணிகள் நடந்தன. இதில் எண்ணற்ற ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கான நிகழ்ச்சி பெங்கால் மட்டம் பகுதியில் நடந்தது. பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை வி.மோகன் தலைமை வகித்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகளின் திட்ட இயக்குனர் உமா மகேஷ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணிகளை துவக்கிவைத்தார். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்ட ஊராட்சிகளின் இணை இயக்குனர் சாம் சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், பாலகொலா கிராம நிர்வாக அலுவலர் மோகனபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலகொலா ஊராட்சி செயலாளர் கார்த்திக் தலைமையில் அலுவலக பணியாளர்கள் சரிதா, வனிதா, சித்ரா, காந்திமதி ஆகியோர் செய்திருந்தனர்.