நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நில அளவர்கள்-வரைவாளர்களுக்கு பயிற்சி முகாம் நிறைவு விழா
- நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது.
கோவில்பட்டி:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4ன் கீழ் புதியதாக தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 153 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு கடந்த ஜூலை 19-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை 60 நாட்கள் நடைபெற்ற நில அளவை பயிற்சி முகாம் நிறைவு விழா கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. எல்.ஜேன் கிறிஸ்டி பாய் தலைமை தாங்கினார். மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் ஆர்.சீனிவாசகன் முன்னிலை வகித்தார். நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், இவ்விழாவில் கல்லூரி இயக்குனர்எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், கோவில்பட்டி தாசில்தார் கே.லெனின் மற்றும் மாவட்ட பராமரிப்பு ஆய்வாளர் எஸ்.சுடலைமுத்து உள்பட கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது. மாவட்ட நில அளவைத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.