உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடப்பட்டபோது எடுத்தபடம்.

கோவில்பட்டி பள்ளிவாசலில் தென்னை மரக்கன்று நடும் விழா

Published On 2022-08-09 08:55 GMT   |   Update On 2022-08-09 08:55 GMT
  • சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் வளாகத்தில் தென்னை மரக்கன்றினை நடவு செய்தனர்.
  • சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து பேசினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி முகமது சாலிஹாபுரம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் வளாகத்தில் தென்னை மரக்கன்றினை நடவு செய்தனர்.

விழாவிற்கு ஜெயக் கொடி சங்கரேஸ்வரி தம்பதியினர் தலைமை தாங்கினர். சூடாமணி பார்வதி, சுடலைமுத்து ஹரிலாதேவி, 9-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மெஹபூப்ஜெரினா, பொன்னுப்பாண்டி ராஜேஸ்வரி, தம்பதியர்கள் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பேசினார்.

விழாவில் ஜமாத் தலைவர் முகமது உசேன், செயலாளர் நல்ல முகமது, துணைச் செயலாளர் பீர்முகைதீன், தொழிலதிபர் நடராஜன், நகர்மன்ற உறுப்பினர் சண்முகவேல், ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளையின் நிறுவனர் ராஜேந்திரன், மிலிட்டரி சந்திரன், ரியல் பேமிலி பவுண்டேஷன் தலைவர் ராஜேந்திரன், சிவமூர்த்தி உட்பட ஏராளமானோர் குடும்ப சகிதம் விழாவில் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைத்து குடும்பங்க ளுக்கும் இறையருள் கிடைக்க வேண்டுமென ஷேக் மீரான் வாழ்த்தி துஆ செய்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ராகவேந்திரா சேவா பொதுநல அறக்கட்டளை யின் நிறுவனத் தலைவர் சீனிவாசன் ஆனந்தவல்லி தம்பதியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News