கோவை: பட்டாசு வெடித்த போது 12 வயது சிறுவனின் 3 விரல்கள் துண்டாகி ஆஸ்பத்திரியில் அனுமதி
- பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
நாடு முழுவதும் தீபா வளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டா டப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதனையும் மீறி பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் ஆதர்ஸ் வித்யாதரன் (வயது 12). 6-ம் வகுப்பு மாணவர்.
தீபாவளி பண்டிகையை யொட்டி இவர் தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு பட்டாசை பற்ற வைத்தார். அது வெடி க்கவில்லை. இதனையடுத்து ஆதர்ஸ் வித்யாதரன் அருகே சென்று பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசு வெடித்தது.
இதில் சிறுவனின் வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை துண்டானது. இதில் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறா ர்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.