ஓய்வறையை தூய்மை பணியாளரை கொண்டு திறக்க வைத்த கலெக்டர் அருண்தம்புராஜ்
- ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.
அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.
திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.
ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.
அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.