உள்ளூர் செய்திகள்

கோவையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர், கமிஷனர்

Published On 2023-03-01 09:32 GMT   |   Update On 2023-03-01 09:32 GMT
  • காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • பள்ளி மாணவர்கள் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோவை,

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக குறைபாட்டினை களையவும் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்த திட்டம் கோவை வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது. திட்டத்தை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி ஆகியோர் தொடங்க்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர். பின்னர் பள்ளி மாணவர்கள் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News