சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கலெக்டர் ஆய்வு
- சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தருவதாக பழனி நாடார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல் சுரண்டையில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மண்டல நிலைய வட்டார அலுவலர் முருகன்,வருவாய் அலுவலர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி,நில அளவையர் பஷீர் அகமது, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.