உள்ளூர் செய்திகள்

கல்லணை கால்வாயில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.

கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-05-28 09:59 GMT   |   Update On 2023-05-28 10:00 GMT
  • ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.
  • மொத்தமுள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்:

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் சீரமைப்பு பணி, ஆலக்கு டியில் முதலை முத்துவாரி, திருச்சென்னம்பூ ண்டியில் கோவிலடி வாய்க்கால், மாரனேரி, விசலூா் படுகை ஆனந்தகா வேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணி, கல்லணையில் புனரமைப்பு பணி, திருக்காட்டுப்பள்ளி காவிரியில் படுகை அணை கட்டுமானப் பணி ஆகியவற்றை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

தொடர்ந்து கல்லணையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னே ற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

கொள்ளிடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஷட்டர்களுக்கான மின்மோட்டார்கள், கொள்ளிடம் மணல் போக்கிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைத்தள பணிகள் மற்றும் தடுப்பு சுவர் ஆகிய பணிகளையும், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது:-

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

மொத்த முள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா்கள் இளங்கோ, மதனசுதாகா், பவழகண்ணன், உதவி செயற்பொறியாளா்கள் சிவக்குமாா், மலா்விழி, சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News