உள்ளூர் செய்திகள் (District)

சரவணா நகர் பகுதியில் மண்டல அலுவலகம் கட்டுமான பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்த காட்சி. 

கடலூர் மாநகராட்சியில் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-11-10 09:07 GMT   |   Update On 2023-11-10 09:07 GMT
  • கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
  • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார்.

கடலூர்:

கடலூர் மாநக ராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட சரவணா நகர் பகுதியில் மாநகராட்சி சிறப்பு நிதியின் கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் ரூ. 5.03 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சோ நகர், பள்ளி வாசல் தெரு, சீமான் தெரு ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூபாய் 1.27 கோடி மதிப்பீட்டில் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், திருப்பாதிரிப்பு லியூர், தானம் நகர் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், வண்ணாரபாளையம் பகுதியில் ரூபாய் 45.74 லட்சம் மதிப்பீட்டில் கே.கே.நகர் குளம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் , மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி , மாநகர் நல அலுவலர் எழில் மதனா , மாநகர பொறியாளர் குருசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News