பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் பதிவேடுகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு
- பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாபநாசம் ஒன்றியம், கோபுராஜபுரம் ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஒருங்கி–ணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.பின்னர், கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் சத்துணவு தரம் குறித்தும், பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு குறித்தும், கழிப்பறை வசதி மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கோபுராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேடு–களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு–வர சம்பந்தப்பட்ட அலுவல–ர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது உடன் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுஜாதா, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் வட்டார குழந்தைகள் ஊட்டச்சத்து அலுவலர் லதா, ஒன்றிய பொறியாளர்கள் சுவாமிநாதன், சரவணன், கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.