வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
- ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் 28 பணிகள் 301.13 கி.மீ தொலைவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
பெருங்கட்மபனூர் மற்றும் ஓர்குடி கிராமங்களில் வாய்க்கால் தொலைவு 4.00 கி.மீ முதல் 7.00 கி.மீ வரை மற்றும் 12.00 கி.மீ முதல் 15.00 கி.மீ வரை தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் வரை மற்றும் தெத்தி வடிகால் 3 கிலோமீட்டர் தூரம் வரை வடிகால் மற்றும் வாய்க்கால்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.
இதன் பாசனப்பரப்பு 12085 ஏக்கர் பயன்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, பெருங்கடம்பனூர் கிராமம் புளியந்தோப்பு தெருவில் மின்சார கசிவு காரணமாக ஜெயராமன் மற்றும் பிரேம்தாஸ் ஆகியோரது தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொ றியாளர் ராஜேந்திரன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.