விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணை- கலெக்டர் வழங்கினார்
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.
- விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைதாங்கி பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட த்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி த்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு ள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம், புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைக ளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் ,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.