உள்ளூர் செய்திகள்

 சூளகிரியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

வேளாண் அலுவலகத்தை கழிவுநீர் சூழ்ந்ததால் கால்வாய் அமைக்க கலெக்டர் உத்தரவு

Published On 2023-06-22 08:22 GMT   |   Update On 2023-06-22 08:22 GMT
  • ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகம் கட்டப்பட்டது.
  • 3 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

 சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, ஒசூர் கிருஷ்ணகிரி சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண் அலுவலகம் இயங்கி வந்தது.

அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 7 அடி ஆழ பள்ளத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகம் கட்டப்பட்டது.

இந்நிலையில் வேளாண் அலுவலகம் தாழ்வான பகுதியில் கட்டபட்டதால் சூளகிரி, மருதான்டப்பள்ளி, தியாகரனபள்ளி ஆகிய ஊராட்சியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் செல்வதற்கு வழியில்லாமல் வேளாண்மை அலுவலக வளாகத்தல் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அப்பகுதியில் புட்கள் வளர்ந்து அசுத்தமடைந்து காணப்படுகிறது.

தற்போது கட்டிடம் கழிவு நீர்க்குள் அமைந்து உள்ளதால் விதை கிடங்கில் கழிவு நீர் மழை நீர் புகுந்து சேதமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கழிவு நீர் செல்ல புதிய சிமெண்ட் கால்வாயை கட்ட அதிரடியாக உத்தரவு வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தோட்டகலை இயக்குனர் பூபதி, தாசில்தார் பண்ணீர் செல்வி, வேளான்மை பொறியாளர் மாது, தோட்டகலை உதவி இயக்குனர் சிவசங்கரி, வேளான் உதவி இயக்குனர் ஜான்லுது சேவியர் பி,டி, ஒ,க்கள் சிவக்குமார், கோபா லகிருஷ்ணன், சூளகிரி ஒன்றிய பொறியாளர்கள் சுமதி, சியாமலா சூளகிரி வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிழன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News