ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் கோரிக்கை
- தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்.
- குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசுசார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பயன்கள் இதுவரை கிடைக்கப் பெறாமல் இருப்பவர்கள் அதைப்பற்றி விவரங்கள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் பூர்த்தி செய்து இரட்டை பிரதிகளில் 31 -ந் தேதிக்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.
ஓய்வூதிய குறைபற்றி மனுஅனுப்ப வேண்டிய மாதிரிப் படிவத்தில் பெயர் மற்றும் முகவரி, பி.பி.ஓ.எண், ஓய்வு பெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை, குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்), முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம், இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் ஆகியவை இடம்பெற்று இருக்க வேண்டும்.
ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டம் எதிர்வரும் 25.11.2022 வெள்ளிக்கிழமை அன்றுகாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நேர்முகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.