உள்ளூர் செய்திகள்

அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

Published On 2023-08-15 09:52 GMT   |   Update On 2023-08-15 09:52 GMT
  • ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.

தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News