உள்ளூர் செய்திகள்

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மொட்டை மாடியில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்‌.

கடலூர் தேவனாம்பட்டினத்தில் வீடு வீடாக கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-11-09 07:59 GMT   |   Update On 2023-11-09 07:59 GMT
  • மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.
  • மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா உத்தர வின் பேரில் ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதி காரிகள் பல்வேறு முன் னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் தேவனாம் பட்டினம் சின்னத்தம்பி செட்டி தெருவில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்றார். பின்னர் வீடு வீடாக நேரில் சென்று மொட்டை மாடி போன்ற இடங்களை டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் நாள்பட்ட தண்ணீர், மழை நீர் உள்ளதா? வீடுகள் சுகாதாரமாக உள்ளதா? மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.

அப்போது ஒரு வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி இருந்ததில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நாள்பட்ட நீரில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் என்பதால் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சுற்றுப்புறத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று டெங்கு கொசு புழுக்கள் உருவாகாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News