உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாதசாமி.

சுவாமிநாத சாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

Published On 2023-11-14 09:38 GMT   |   Update On 2023-11-14 09:38 GMT
  • காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
  • நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோவில் அமைந்துள்ளது.

கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகா ற்றுப்படையிலும், அருணகிரி நாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும்.

மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இந்த கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன.

இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்தசஷ்டி விழா நேற்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்ட பத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு மலர் அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து விழா நாள்களில் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News