- 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.
- கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கல்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ பவுலின் கலந்து கொண்டு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கி கர்ப்பக் காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவா்புகழேந்தி, வர்த்தக சங்க தலைவா் தென்னரசு , தி.மு.க வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றியச் செயலாளர் உதயம் முருகையன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சித்ரா வரவேற்று நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.