வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
- வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.வத்தலக்குண்டு வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வத்தலக்குண்டு பேரூராட்சி சமுதாய கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரிமுருகன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வத்தல க்குண்டு தி.மு.க. பேரூர் செயலாளர் சின்ன த்துரை, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பாக்கியலட்சுமி, ஊட்டச்சத்து நிபுணர் மதர்தெரசா, பேராசிரியர் சரவணசெல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர் சமுதாய வளை காப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் போட்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 வகையான உணவு வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயராணி நன்றி கூறினார்.