உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள்-அடுத்த மாதம் நடக்கிறது

Published On 2022-12-31 09:07 GMT   |   Update On 2022-12-31 09:07 GMT
  • மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
  • விளையாட்டு போட்டிகளில் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தென்காசி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி , மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளை யாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் தென்காசி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்களின் தனி நபர் விவரங்கள், அணி விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் திறமையாக செயல்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலி இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா போட்டிகள், அகில இந்திய அளவிலான குடிமைப் பணியாளர்கள் போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுவர்.

ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவில் முதல் 3 இடங்கள் பெறுவோருக்கு பரிசுத் தொகையுடன் முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்

அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் 3 இடம் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்புக்கான முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்.

மேலும் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். எக்காரணம் கொண்டும் வேறு வழிமுறை மூலமாக போட்டிகளில் பங்கேற்க இயலாது.

இதுகுறித்த மேலும் விபரங்கள் அறிய 7401703454 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News