உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் உரிமைத்தொகைக்கு பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார்

Published On 2023-10-17 08:01 GMT   |   Update On 2023-10-17 08:01 GMT
  • 2 மாத உரிமைத்தொகையை பெண்கள் பெற்றுவிட்டநிலையில் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
  • தாலுகா அலுவலகத்தில் சென்று விசாரித்தாலும் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

நிலக்கோட்டை:

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். பெண்களின் வங்கி கணக்கிற்கே இந்த தொகை வரவு வைக்கப்படுவதால் எவ்வித இடைத்தரகருக்கும் பணம் கொடுக்காமல் முழுமையாக தங்களுக்கு கிடைப்பதால் பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

தகுதியான மகளிருக்கு பணம் கிடைக்கவேண்டும் என்பதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 2 மாத உரிமைத்தொகையை பெண்கள் பெற்றுவிட்டநிலையில் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டை தாலுகாவில் தகுதியான மகளிர் பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்.

தாலுகா அலுவலகத்தில் சென்று விசாரித்தாலும் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அனைத்து தகுதியான பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்றுகூறி உள்ள நிலையில் முகாம்கள் அமைத்து விடுபட்ட பெண்களை சேர்க்கவேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News