அம்மன் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா லட்சார்ச்சனை, சண்டி ஹோமம்
- பாரக்கல் புதூரில் ராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் அத்தனூர் அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
- மண்டல அபிஷேகம் நிறைவு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள குருக்கபுரம் கிராமம், பாரக்கல் புதூரில் ராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் அத்தனூர் அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் சேலம், நாமக்கல், தருமபுரி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர்,பெரம்பலூர், திருச்சி, கரூர், ஈரோடு பல மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை–யொட்டி தினந்தோறும் மண்டபக்கட்டளை நிகழ்ச்சி நடந்தது. 48-ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி லட்சார்ச்ச–னையும், சண்டி ஹோமமும் நடந்தது. விழாவில் கும்பாபி–ஷேகத்திற்கு வரிவசூல் செய்து கொடுத்த பங்காளிகள் கவுரவிக்கப்பட்டனர். மண்டல அபிஷேகம் நிறைவு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.