தலைமை ஆசிரியையை கண்டித்து ஆசிரியை நடுரோட்டில் தர்ணா
- சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர்.
- நேற்று மதியம் பள்ளி எதிரே உள்ள தாரமங்கலம்- வனவாசி சாலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளி தலைமை ஆசிரியையாக நங்கவள்ளியை சேர்ந்த கீதாஞ்சலி உள்ளார். அங்கு 6, 7, 8-ம் வகுப்புக்கு அறிவியல் ஆசிரியையாக பொட்டனேரியை சேர்ந்த உமா பணிபுரிகிறார். நேற்று மதியம் பள்ளி எதிரே உள்ள தாரமங்கலம்- வனவாசி சாலையில் உமா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சக ஆசிரியைகள் பேச்சு நடத்தி, அவரை பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து மக்கள் திரண்டனர். நங்கவள்ளி வட்டார கல்வி அதிகாரிகள் சரோஜா, மாலதி விசாரித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கீதாஞ்சலிக்கும், உமாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று நடந்த அறிவியல் தேர்வு பொறுப்பை உமாவுக்கு வழங்காமல் வகுப்பு ஆசிரியையிடம் கீதாஞ்சலி வழங்கினார். அதை கண்டித்து உமா தர்ணாவில் ஈடுபட்டார். விசாரணை அறிக்கைைய முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.