நாகைக்கு கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினார்.
- தப்பி ஓடிய குற்றவாளியை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வாஞ்சூர் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாஞ்சூர் சோதனை சாவடி வழியே புதுச்சேரி மாநிலம், காரைக்காலிருந்து வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் 180 மில்லி அளவுள்ள 197 கோட்டர் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுகடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடமிருந்து 197 மதுபாட்டில்களும் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைய போலீசார் கைப்பற்றினார்.
இதேபோல் நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் சைக்கிளை மறித்த போது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 100 புதுச்சேரி சாராய பாட்டில்களையும் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.