பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
- ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:,
தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே கண்டியங்காடு பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அதில் 120 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ குருணை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர் அருகே உள்ள மதுக்கூர் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 46) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அவர் பதுக்கிய 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு ள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.