- காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- நாகை மாவட்ட கடைக்கோடி பகுதியான தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு யூரியா மற்றும் டி.ஏ.பி உரங்கள் இல்லாமல் சாகுபடி மிகவும் பாதிக்கப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர்கள் வீரமணி, எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சுர்ஜித் சங்கர் கலந்து கொண்டு பேசினார். ஆலோசனைக் கூட்டத்தில், நாகை மாவட்ட கடைக்கோடி பகுதியான தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு யூரியா மற்றும் டி.ஏ.பி உரங்கள் இல்லாமல் சாகுபடி மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தலைஞாயிறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி உரங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
முன்னதாக தலைஞாயிறு வேளாணி முந்தல் பகுதியில் காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் சுர்ஜித் சங்கர் கலந்துகொண்டு காங்கிரஸ்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.