சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு கண்டனம்- காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- டெல்லியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.
- சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் இன்று ஆஜர் ஆனார்.
இதை கண்டித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். இதே போல் பல மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.
முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, சிரஞ்சீவி, அகரம் கோபி, வி.ஆர்.சிவராமன், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், சிவராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம், டில்லி பாபு, ரஞ்சன்குமார், அடையாறு துரை மற்றும் திருவான்மியூர் மனோகரன், கராத்தே ரவி, ஜி.ஜி.இளங்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் அடக்கு முறையை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.