உள்ளூர் செய்திகள்

வாழப்பாடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

வாழப்பாடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

Published On 2023-04-01 09:20 GMT   |   Update On 2023-04-01 09:20 GMT
  • இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.
  • 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி:

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்–-உளுந்துார்பேட்டை இடையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 8 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள புறவழிச்சாலைகள், இரு வழிச்சாலையாகவே உள்ளன.

இச்சாலைகள் அகலம் குறைவாக அபாயகரமான வளைவுகளுடன் அமைந்து ள்ளதால் இச்சாலையில் பயணிப்போரிடம் 'விபத்து அச்சம்' தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, வாழப்பாடி பகுதியில் முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான 4 கி.மீ துார புறவழிச்சாலையில், போதிய எச்சரிக்கை பதாகைகள், சாலையோர மின் விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் சாலை யொட்டிகள் அமைக்கப்படா ததால் அடிக்கடி விபத்தும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளை, 4 வழிச்சாலையாக தரம் உயர்த்திட மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ் சாலைத்துறை, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு வலியுறுத்தியது.

இதனையடுத்து, இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலை யாக தரம் உயர்த்தும் பணி 3 மாதங்களாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

வாழப்பாடி பகுதியில் புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், வருகிற மே மாதத்திற்குள் 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் வாழப்பாடி பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இணைப்புச்சாலை

வாழப்பாடி பகுதியில் 4 வழிச்சாலை அமைப்பதால், வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் இருந்து நீதிமன்றம் வழியாக கிழக்குகாடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வழியின்றி அவதிக்குள் ளாகியுள்ளனர்.

எனவே, தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு புறம் கிழக்குக்காடு புகையி லைக்காரர் தோட்டத்தில் இருந்து தெற்கத்தியார் தோட்டம் வரையும், வடக்குபுறம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் இருந்து பால் கூட்டுறவு சங்கம் வரையும் இணைப்புச்சாலை அமைத்து, பால் கூட்டுறவு சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சுரங்க பாலத்தோடு கிழக்குக்காடு சாலையை குடியிருப்பு பகுதியுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை.

Tags:    

Similar News