உள்ளூர் செய்திகள்

40-வது ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

ராதாபுரம் ஒன்றியத்தில் 40-வது ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி- மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்

Published On 2023-09-21 09:00 GMT   |   Update On 2023-09-21 09:00 GMT
  • ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

திசையன்விளை:

ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. 3ம் கட்டமாக 40வது ஆழ்துளை கிணறு, உவரி பஞ்சாயத்தில் அமைக்கப்படுகிறது.

இந்த பணியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். 3ம் கட்டமாக உவரி, க.உவரி, க.புதூர், முதுமொத்தான்மொழி, அப்புவிளை, சமூகரெங்கபுரம் மற்றும் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகள்

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜன், திசை யன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், மா வட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், வார்டு உறுப்பினர் ராணி, ஜெயமேரி, வினி ஸ்டன், பொற்கிளி நட ராஜன், புளியடி குமார், முத்து ஆகி யோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News