தூத்துக்குடி சின்னமணிநகரில் கால்வாய் அமைக்கும் பணி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
- ரூ.11 லட்சம் வீதம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு சின்னமணிநகரில் புதிய கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
- இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநக ராட்சிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியான 33-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
பொதுமக்கள் கோரிககை
அப்போது அப்பகுதி மக்கள் சின்னமணிநகரில் புதிய கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.11 லட்சம் வீதம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு சின்னமணிநகரில் புதிய கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சி லர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், வட்ட அவைத்தலைவர் சுபாஷ், துணை செயலாளர் அருணா, வட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், பாஸ்கர், வார்டு நிர்வாகிகள் செந்தூர்பாண்டி நாடார், சவுந்தர்ராஜன், தமிழ், கண்ணன், பெருமாள், ஆரோக்கியராஜ், சேக்மியான், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.