உள்ளூர் செய்திகள்

பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

விளாத்திகுளம் அருகே புதிய வகுப்பறை, ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-09-02 07:04 GMT   |   Update On 2023-09-02 07:04 GMT
  • விருசம்பட்டி கிராமத்தில் 15-வது நிதி குழு 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
  • அப்போது பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள 2 வகுப்பறை கட்டிடங்ககள், 15-வது நிதி குழு 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்தை மார்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், பொறியாளர் அலெக்ஸ், விளாத்திகுளம் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News