உள்ளூர் செய்திகள்

 கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படக்கூடிய நிவாரணத் தொகையை ஆணையத் தலைவர் சிவக்குமார் வழங்கினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துதுறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்- ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவர் பங்கேற்பு

Published On 2023-09-08 09:06 GMT   |   Update On 2023-09-08 09:06 GMT
  • ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் தலைமையில் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் வன்கொடுமை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான சிவகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆணையத்தின் உறுப்பினர்கள் புனித பாண்டியன், குமாரவேல், லீலாவதி, இளஞ்செழியன், ரகுபதி, ரேகா பிரியதர்ஷினி மற்றும் ஆணைய உறுப்பினர் செயலாளர் கந்தசாமி, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விபரங்கள் தொடர்பாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, வன்கொடுமை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட வர்களுக்காக வழங்கப்படக்கூடிய நிவாரணத் தொகையை ஆணையத் தலைவர் சிவக்குமார் வழங்கினார்.

Tags:    

Similar News