உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

திருக்குறுங்குடியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது

Published On 2023-09-23 08:38 GMT   |   Update On 2023-09-23 08:38 GMT
  • திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
  • பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

நெல்லை:

திருக்குறுங்குடி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமையில் திருக்குறுங்குடியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பயணிகள் நிழற்குடை

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஏற்கனவே திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல் அரசு மருத்துவமனை அருகிலும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும்.

மேலும் திருக்குறுங்குடி பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் விரைந்து மராமத்து பணி, சாலைத்தெரு பழைய அன்னதான சத்திரத்தில் திருமண மண்டபம், திருப்பாற்கடல் நம்பிகோவில் எதிர்புறம் அரசு ஆற்று புறம்போக்கு நிலத்தில் ரேஷன் கடை மற்றும் திருமேலசாலைத்தெரு கைகாட்டி முன்னாள் பயணியர் விடுதி அருகே மின்வாரிய அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை அமைத்தல் போன்ற பணிகளை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் செயல் அலுவலர் உமா, இளநிலை பொறியாளர் பரமசிவன், பண்டக சாலை தலைவர் கணேசன், திருக்குறுங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் இசக்கியம்மாள், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவர் ராசாத்தி, திருக்குறுங்குடி நகர செயலாளர் கசமுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சாமிநாதன், தி.மு.க. நிர்வாகி மாடசாமி, சமூக ஆர்வலர் ராமசுப்பிரமணியம், வார்டு கவுன்சிலர்கள் உள்பட காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அங்குள்ள தலைமை மருத்துவரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியில் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அப்போது எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

Tags:    

Similar News