உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் கள்ளச்சாரயம் ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடை பெற்றது.

மயிலாடுதுறையில் கள்ளச்சாரயம் ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

Published On 2023-05-19 08:48 GMT   |   Update On 2023-05-19 08:48 GMT
  • கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
  • பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க “10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)“8300018666” என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மயிலாடுதுறை :

மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறைஅலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிய–ப்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க "10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)"8300018666" என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட மேலாளர் நாகப்பட்டினம் வாசுதேவன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News