உள்ளூர் செய்திகள்

சிவகிரி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

சிவகிரி பேரூராட்சியில் மீண்டும் மஞ்சப்பை குறித்து ஆலோசனை கூட்டம்

Published On 2023-11-15 08:03 GMT   |   Update On 2023-11-15 08:03 GMT
  • கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
  • கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விரிவான செயல் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக அமல்படுத்திட கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலகங்களில் கூட்டம் நடத்த வேண்டும்.

தங்களது உள்ளாட்சி அமைப்பின் எல்கைக்குட்பட்ட கடைகள். உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை முறையாக அமல்படுத்திட கேட்டும், கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர உரிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற 30-ந் தேதிக்குள் ஒப்படைப்பு செய்யக்கேட்டு கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யாணையை அனைத்து பொதுமக்கள், கடை மற்றும் உணவக உரிமையாளர்களிடம் விளக்க வேண்டும், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வருகிற 31-ந் தேதிக்குள் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மேற்படி செயல்திட்டங்களை தங்களது உள்ளாட்சி அமைப்பின் பகுதிக்குள் முறை யாக செயல்படுத்திடவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், சீதாராமன், குருசாமி, ரவிந்திரநாத் பாரதி, குமார், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர்பாக விரிவாக எடுத்துரை க்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் தங்கராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News