கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தல் குறித்தான ஆலோசனை கூட்டம்
- ஆலோசனை கூட்டத்திற்கு சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார்.
- கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க 2022 -25-ம் ஆண்டுக்காண நிர்வாக குழுவினை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பசுவந்தனை சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். உற வின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான ஆர்.எஸ். ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரைட் வே குளோபல் மார்க்கெட்டிங் சண்முகராஜா வரவேற்று பேசினார்.
சட்ட நகல் எரிப்பு போராட்ட வீரர் நாஞ்சில் குமார் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் எம்.எஸ்.எம்.ஆர். ராஜசேகர், ராஜன் மேட்ச் வொர்க்ஸ் ராஜவேல், மகாலட்சுமி மேட்ச் ஒர்க்ஸ் ஜெயபிரகாஷ், காமாட்சி மேட்ச் ஒர்க் சுரேஷ், ஸ்ரீ கண்ணன் லாரி சர்வீஸ் ரத்னாகரன், அரசன் அண்ட் கோ நெல்லையப்பன், ஆரா செல்டர்ஸ் ஜேசுமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் குறித்தான சட்ட ஆலோசனைகளை வக்கீல் செல்வம் மற்றும் ரத்தினராஜா, ஆகியோர் வழங்கினர்.
கூட்டத்தில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வத்திற்கு ஆதரவு கேட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.