உள்ளூர் செய்திகள்

கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம்

Published On 2022-07-06 10:31 GMT   |   Update On 2022-07-06 10:31 GMT
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • வேலைநிறுத்தத்தினால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம்:

வாடகை உயர்த்தி தரக்கோரி கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பு என்ற பெயரில் அனைத்து அமைப்புகளும் 4ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகங்களில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சென்னை துறைமுக அதிகாரிகள் தமிழக அரசின் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் பெட்டக முனைய உரிமையாளர்கள் கண்டெய்னர் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் என பல்வேறு அமைப்புகள் அமைப்புகளுடன் சென்னை துறைமுகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து இந்த வேலைநிறுத்தத்தினால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News